Monday, December 28, 2009

மறைந்த மனிதர்கள்

காலத்தின் வேகத்தில் நம்மில் இருந்து விடுபட்ட மனிதர்கள்
இவர்கள் என்னவானார்கள் என்ற ஏக்கம் நம்மில் இருந்தாலும்
நம்மில் இருந்து விடுபட்ட மனிதர்கள் ,இவர்கள் .

சின்ன வயசுல நம்முள் பதிந்த இவர்களை மீண்டும் ஒருமுறை நம்மோடு வாழவிடுவோம்
.
( கோவை விஸ்வா தொடங்கி வைத்தது )

பள்ளி வாசலில் மாங்கா விற்கும் பாட்டி
சர்பத் விற்பவர்
வீட்டுக்கு வந்து முடிதிருத்துபவர்
தபால்காரர்
வித விதமான் உருவத்தில் மிட்டாய் விற்பவர்

இவர்கள் மிக குறைந்த நேரம் நம்மோடு இருந்தாலும் நம் உணர்வில் அதிகம் கலந்தவர்கள் - இவர்கள் நமக்குள் ஏற்படுத்திய மகிழ்வு மிக அதிகம்
இவர்கள் நம்மோடு இருந்த அந்த கணம் மிக ஆழமாக நம்மில் எழுதப்பட்டது .

இதைபோல் நாம் தவறவிட்ட கணங்களை இன்னும் அதிகம்

நண்பர்களோடு கடலில் குளித்தது
இரண்டு கி. மீ . சைக்கிளில் சென்று கற்கண்டு பல் குடித்தது
காலை தொடங்கி இருட்டும் வரை கிரிகட் விளையடியது
நம்மை பார்க்காத பெண்ணை தேடி ....

இப்படி நீளும் ஒரு பட்டியல்
நம் நண்பர்களை தவிர்த்து இந்த கணங்களை நம்மில் கொண்டுவந்த முகம் தெரியாத மனிதர்களை நாம் தொலைத்து விட்டோம்
காரணம் இல்லாமல் நம்மில் வந்த அந்த மனிதர்கள் - நம் முகமில்லாத தோழர்கள்.






No comments: